பொகவந்தலாவை பாதை 880 மில்லியன் ரூபா செலவில் காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை. பொது மக்கள் பாராட்டு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ண்டாண்டு காலமாக பொகவந்தலா ஹட்டன் ஊடான பிரதான பாதை குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.இதனால் பொது மக்கள் மற்றும் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
குறித்த வீதி சீரின்மை காரணமாக இவ்வீதியில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.அத்தோடு அடிக்கடி வாகனங்களும் பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அரச பணியாளர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டன. இதனால் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தன.
இந்திய அரசாங்த்தின் நிதியுதியில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டிக்கோயா கிளங்கன் வருகை தந்த போது குறித்த வீதியின் ஒரு பகுதி நோர்வூட்டிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வரை மாத்திரம் புனரமைக்கப்பட்டன. ஏனைய பகுதி கடந்த காலங்களில் நோர்வூட் பகுதி வரை மாத்திரம் காபட் இடப்பட்டன.
இதனால் நோர்வூட் முதல் பொகவந்தலாவை வரையான பகுதி மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டன.இப்பாதையில் வழி விடும் போது எத்தனையோ வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.மழை காலங்களில் இவ்வீதியில் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வாகனங்கள் பயணஞ் செய்தன.
நல்லாட்சி அரசாங்கத்தினால் இவ்வீதியினை புனரமைப்பதற்காக பல தடைவைகள் அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் அவர்களால் குறித்த வீதியினை புனரமைக்க முடியாமல் போயின.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் பதவியேற்ற பின் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்கள் முன்வைத்த வேண்டுக்கோளுக்கமைய ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டமாக கெம்பியனுக்கு அருகாமை வரை 15 கிலோமீற்றர் புனரமைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020.05.06 திகதி புனரமக்க ஆரம்பிக்கப்பட்ட குறித்த வீதி சுமார் 272 நாட்களில் நிறைவு செய்யப்படவுள்ளன.
6.5 மீற்றர் அகலப்படுத்தி காபட்யிடப்படும் குறித்த வீதிக்கு அரசாங்கம் 880 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளன.
இது குறித்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும் பொது மக்கள் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :