உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் எனப்படும் சிவநேச துரை சந்திரகாந்தன், சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆசு மாரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, திலும் அமுனுகம, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மற்றும் A.H.M ஹலீம் ஆகியொருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மரசிங்க மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது
இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் செப்டம்பர் 3ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
0 comments :
Post a Comment