ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் காபட் வீதிகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைய மருதமுனை கடற்கரை பிரதான வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாண்டிருப்பு தொடக்கம் பெரியநீலாவணை வரைக்குமான சுமார் 1820 மீற்றர் நீளம் கொண்ட நவீன காபட் வீதியாக இந்த கடற்கரை பிரதான வீதி புணரமைப்பு செய்யப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண மேலதிக பணிப்பாளர் பொறியியலாளர் ஐ.எல்.அமீனுல் பாரி வீதி செப்பனிடும் கனரக இயந்திரத்தை ஓட்டி ஆரம்பப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்த இந்த வீதி புணரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் உலமாக்கள் பிராத்தனை செயததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மருதமுனை அனைத்து பள்ளிவாசல்களின் தலைவைர் அஸ்செய்க் எம்.ஐ.குசைனுத்தீன் உட்பட உலமாக்கள், கல்விமான்கள், ஊர் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment