கிழக்கின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸே நிர்ணயிக்கும்


அஸ்லம் எஸ்.மௌலானா-
திர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் என்பது ஆட்சியை நிர்ணயிக்குமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அக்கட்சியின் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு மருதமுனை சமூக வள நிலையத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

"பொதுத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கின் ஆட்சியை பொதுஜன பெரமுன கைப்பற்ற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பஷில் ராஜபக்ஷ வெளியிட்டிருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளிகளாக இருக்கின்ற பிள்ளையான், கருணா, அதாஉல்லாஹ் என்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த வாக்கு வங்கியானது ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியை விட குறைவாகவே இருக்கிறது.
இந்நிலையில் நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தலில் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான யுக்தியை மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. இது விடயத்தில் நாங்கள் சமூக ரீதியாக சிந்திக்க வேண்டுமே தவிர தனி நபர்களின் நலன்களை முன்னிறுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள அதேவேளை அதாஉல்லாஹ்வுக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படாமல் அவர் இந்த அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களது ஆதரவுடன் கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசின் முக்கிய யுக்தியாகும்.
இதற்கு மத்தியில் எமது கட்சியும் முஸ்லிம்களும் எவ்வாறான அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படப்போகிறோம் என்பதுதான் இன்று எமக்குள்ள பிரச்சினையாகும். நாங்கள் சமகால அரசியல் யதார்த்தங்களை புரிந்து செயற்பட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இனிவரும் காலங்களில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எனது அரசியல் செயற்பாடுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன். நான் இவ்வாறு சமூக ரீதியாக பேசும்கின்றபோது கட்சியை விட்டுப் போகப்போகிறேன் என்று எவரும் நினைத்து விடாதீர்கள். இவ்வாறான கதைகள் வருகின்றபோது எமது கட்சிப் போராளிகளும் பொது மக்களும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்" எனவும் ஹரீஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மருதம் விளையாட்டுக்கழக பிரதிநிதிகளினால் பாராளுமனற உறுப்பினர் ஹரீஸ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :