நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட் அவர்களின் முஹர்ரம் வாழ்த்து


முஹர்ரம் – ஹிஜ்ரி 1442ம் ஆண்டு இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA. நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஹர்ரம் மாதம் ஆரம்ப மாதமாகவும், சிறப்பான மாதமாகவும் கருதப்பட்டு, கொண்டாடப்படுகின்றது.
பெருமானார் நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஹிஜ்ரி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது நோக்கப்படுவதால், அல்லாஹ்விடத்திலும் புனித மாதமாக முஹர்ரம் கருதப்படுகின்றது.
எமது இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில், ஹிஜ்ரத் பயணம் பாரிய திருப்பங்களையும், பல்வேறு படிப்பினைகளையும் ஏற்படுத்தியதை நாங்கள் மறந்து வாழ முடியாது. பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து, இந்தக் கஷ்டமான பயணத்தை தனது தோழர்களுடன் இணைந்து மேற்கொண்டார். இறுதியில் பாரிய வெற்றிகளையும் கண்டார்.

தியாகங்கள் மூலம்தான் வெற்றிகள் கிடைக்கும் என்பதை இந்த ஹிஜ்ரத் பயணம் நமக்குப் படிப்பினையாகத் தருகின்றது. இஸ்லாமிய உலகில் “முஹர்ரம் மாதம்” புனித மாதமாக இன்று கொண்டாடப்படுகின்றது. இலங்கை வாழ் முஸ்லிம்களும் இன்று இதனை கொண்டாடுகின்றனர்.
நமக்கிடையே ஏற்பட்டிருக்கும் பல்வேறு முரண்பாடுகளைக் களைந்து இஸ்லாமிய அடிப்படையில் நாம் வாழ்வதற்கு, இந்தப் புனித மாதம் வழிவகுக்க வேண்டுமென நான் இத்தருணத்தில் பிரார்த்திக்கின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :