ஹட்டன் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.


ஹட்டன் கே.சந்தரலிங்கம் -

ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகாமையில் உடைந்த பாலத்திற்கு கீழ் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் ஆற்றுப்பகுதியில் கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இன்று (21) திகதி பகல் 2.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலம் யாருடையது என இது வiரை அடையாளம் காணப்படவில்லை.
இச்சடலம். அணிந்திருக்கும் மேலாடையினால் தலை மூடப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சடலம் காணப்படுவதனால் எருராவது கொலை செய்துவிட்டு குறித்த சடலத்தினை கொண்டு வந்து ஆற்றில் போட்டனரா? அல்லது கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் அடித்து செல்லப்பட்டு இவ்விடத்துக்கு வந்துள்ளதா என்பது தொடர்பாக பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் ஒரு வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சடலம் யாருடையது என்பது தொடர்பாகவும் இவர் எவ்வாறு இவ்விடத்திற்கு வந்தார் என்பது தொடர்பாகவும் அல்லது இவரை எவராவது கொலை செய்து விட்டு கொண்டு வந்து போட்டுள்ளனரா? என்பது தொடர்பாக விரிவான விசாரணைகளை ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :