எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் குறிப்பாக கிண்ணியா, தோப்பூர் போன்ற பிரதேசங்களில் நிலவிவருகின்ற குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக இன்று(31) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் திரு. சுதேசன் அவர்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மூதூர்,தோப்பூர் மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண நீர்வழங்கால் பிரதி முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கூறினார்.
0 comments :
Post a Comment