திருகோணமலை சேவிங் ஹியூமெனிட்டி அமைப்பின் ஏற்பாட்டில்
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் உள்ளூர் சர்வமத குழுக்களுக்கான (LIRC) முரண்பாட்டு நிலைமாற்றம் (Conflict Transformation) தொடர்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த திங்கட்கிழமையும்(24),செவ்வாய்கிழமையும் (25) திருகோணமலையில் அமைந்துள்ள கிறீன் பார்க் விடுதியில் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்,மற்றும் முஸ்லிம் சர்வ மத தலைவர்கள்,இளைஞர்கள் மற்றும் யுவதிகள் முப்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இதன் போது முரண்பாடுகள் தோன்றுவதற்கான வழிவகைகள்,முரண்பாட்டுக்கான அடிப்படை தாக்கம்,மற்றும் முரண்பாடுகளின் போது சர்வ மத குழுக்களின் பங்களிப்பின் முக்கியத்துவம்,இலங்கையில் முரண்பாடுகளின் ஆதிக்கம் எவ்வாரான பிண்ணனியில் ஏற்பட்டது, முரண்பாடுகளால் இன பாகுபாடுகள் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற தலைப்புகளில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சேவிங் ஹியூமெனிட்டி அமைப்பின் இலங்கைக்கான தலைவர் டி.எம்.ஜரூக்,மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.அன்சாரி போன்றோர் வளவாளர்களாக கலந்து தெளிவுபடுத்தினார்கள்.
0 comments :
Post a Comment