- எச்.எம்.எம்.பர்ஸான்-
மீன் வளர்ப்பாளர் ஒருவரின் மீன்கள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏ.ஏ.சலீம் என்பவரின் மீன்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஓட்டமாவடி மூன்றாம் வட்டார ஆற்றில் கூடமைத்து கொடுவா இன மீன்களை வளர்த்து வந்துள்ள நிலையில் குறித்த மீனவரின் மீன்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த நபர் மீன் கூடுகளை சுத்தம் செய்ய சென்ற போதே மீன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
அதில் 250 முதல் 500 கிலோ கிராம் எடைகளைக் கொண்ட சுமார் 350 க்கும் மேற்பட்ட மீன்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மீன் வளர்ப்பாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment