றாசிக் நபாயிஸ்-
வருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ள மாணவர்களின் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பிரதேச செயலகங்கள் தோறும் முன்னெடுத்து வருகின்றன.
இத்திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 176 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் யூ.கே. அப்துல் றஹீம் மற்றும் சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்ரப் அலி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
இப்புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் தீகவாபி உள்ளிட்ட மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் நன்மை அடையவுள்ளனர்.
இம்மாணவர்கள், கல்வி பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்காக இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் தலா 1,500 ரூபா வழங்கப்படவுள்ளது.
மேலும், இம் மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகும் பட்சத்தில், இப்புலமைப் பரிசில் நிதியினை, பல்கலைக் கழக கல்வியினை கற்கும் வரை பெற்றுக்கொள்ளவதற்கான சந்தர்ப்பம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment