தென்கிழக்கு பல்கலையில் முதல் தடவையாக தத்துவ முதுமானி மற்றும் கலாநிதி ஆய்வு கற்கை நெறிகள்!



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-

வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களிலுள்ள பட்டதாரிகளுக்கான முதல் தடவையாக தத்துவ முதுமானி மற்றும் கலாநிதி ஆய்வு கற்கை நெறிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பம். 

டக்கு, கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களிலுள்ள பட்டதாரிகளின் நன்மை கருதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் தடவையாக தத்துவ முதுமானி மற்றும் கலாநிதி ஆய்வு பட்டபின் படிப்பு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளாக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் திணைக்களத்தினால் இவ் ஆய்வுக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வராலாற்றில் முதல்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள இப்பட்டபின் படிப்பு கற்கை நெறிக்கான சந்தர்ப்பத்தை தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பீடாதிபதி கலாநிதி அப்துல் மஜீட் மேலும் தெரிவித்தார்.

இக்கற்கை நெறிக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக தொழில்நுட்பவியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆந் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கமைவாக தத்துவ முதுமானி ஆய்வு கற்கை நெறிக்காக 124,750.00 ரூபாவும், கலாநிதி ஆய்வு கற்கை நெறிக்காக 158,750.00 ரூபாவும் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கலைப் பெறுவதற்கு 0672052818 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு இவ் ஆய்வு கற்கை நெறி ஒரு வரப்பிரசாரமாகும் என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களின் முயற்சினால் அவரது சிறந்த வழியாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக பல்துறை சார்ந்த ஆய்வுகள், சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு போன்றவைகளுக்கும் மற்றும் இவ்வாறான கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் கவனம் எடுத்து இங்குள்ள விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் ஊக்கிவிப்பதும் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :