மின் தடை அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-


நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆரம்ப அறிக்கை மின்சக்தி அமைச்சரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி 8 மணிநேர மின்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் நாடாளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்து ஆராய்வதற்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒருவார காலத்திற்குள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையின் ஆரம்ப கட்ட ஆய்வு அறிக்கை மின்சக்தி அமைச்சரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :