நாளை காரைதீவிலிருந்து மண்டுருக்கான தலயாத்திரை!


காரைதீவு சகா-


காரைதீவு ஸ்ரீ நந்தவனபிள்ளையார் கதிர்காம பாதயாத்திரிகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முருகபக்தர்கள் தங்கள் நேர்த்தியை நிறைவேற்ற நாளை 29ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை காரைதீவிலிருந்து மண்டுர் முருகனாலயத்திற்கான தலயாத்திரையை மேற்கொள்ளவுள்ளனர்.

மேற்படி சங்கத்தின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் முருகபக்தர்கள் தங்கள் நேர்த்தியை நிறைவேற்ற கொரோனா சூழல் காரணமாக சுகாதாரமுறைப்படி இத்தலயாத்திரையை மேற்கொள்ளவுள்ளனர்.

காரைதீவிலிருந்து அதிகாலை 5மணிக்கு இத்தலயாத்திரை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேடபூஜையின் பின்னர் காலை 5.30மணியளவில் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தை வந்தடைந்து அங்கிருந்து புறப்பட்டு கல்முனை கிட்டங்கி நாவிதன்வெளியூடாக சமயஆசாரப்படி மண்டுரைச்சென்றடையவுள்ளது.

எனவே கலந்துகொள்ளவிரும்பும் பக்தஅடியார்கள் இந்துசமயஆசாரப்படி உடையணிந்து கட்டாயம் மாஸ்க்அணிந்து உரியநேரத்திற்கு வந்து சமுகஇடைவெளியைப் பேணியவாறு தலயாத்திரையில் பங்குபற்றலாமென ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :