ஹொங்கொங்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்றாம் கட்ட அலை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 121 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதனைத்தொடர்ந்து ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment