நௌசாத் ,சிராஸ் மீராசாஹீப் ஆகியோர் கட்சிக்கு துரோகமிழைத்தனர்.–மக்களுக்கு நன்றி தெரிவிப்பில் அஸ்ரப் தாஹீர்

பாறுக் ஷிஹான்-


9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்களான நௌசாத் மற்றும் சிராஸ் மீராசாகிபு என்பவர்கள் எமது கட்சியில் இருந்து கொண்டு நழுவல் போக்குடன் துரோகங்களை செய்து இதர கட்சிகளுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளனர் என அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம் அஸ்ரப் தாஹீர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் நிறைவடைந்த பின்னர் மக்களிற்கு நன்றி தெரிவித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நிந்தவூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று(9) மதியம் நடாத்தி உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து அக்ருத்து தெரிவித்த அவர்

கடந்த தேர்தலில் பிரதேச வாதத்தை ஊட்டி இனவாதத்தை வளர்க்க முற்படுகின்றவர்களை இனங்கண்டு கொண்டுள்ளோம்.மேலும் தற்போது மாற்று கட்சியில் வென்றவர்கள் இதுவரை எதனை செய்தார்கள் என மக்கள் உணர வேண்டும் . எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இத்தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கின்றது.

இந்த ஆசனத்தின் ஊடாக அம்பாறை மாவட்ட குறை நிறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த காலங்களில் இரவு பகலாக எம்முடன் இணைந்து குறித்த வெற்றிக்காக ஒத்துழைப்புகளை வழங்கியவர்களுக்கும் மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்களான நௌசாத் மற்றும் சிராஸ் மீராசாகிபு என்பவர்கள் எமது கட்சியில் இருந்து கொண்டு துரோகங்களை செய்து இதர கட்சிகளுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

எனினும் மாவட்டத்தை வெல்வதாக மக்கள் மத்தியில் கூறி திரிந்தவர்களை இம்முறை மக்னள் முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களிக்க தயாரில்லை என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.

அதாவது முஸ்லிம் காங்கிரஸை மக்கள் எவரும் நம்ப தயாரில்லை என்பதாகும் என குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :