அரசியல், சமூக, கலை, இலக்கிய செயற்பாட்டாளர் மல்லியப்புசந்தி திலகர் எழுதியுள்ள இரண்டாவது நூலான “மலைகளைப் பேசவிடுங்கள்” நூலின் அறிமுகக் கூட்டம் எதிர்வரும் 29-08-2020 சனிக்கிழமை மாலை 2 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மூத்த எழுத்தாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உப தவிசாளருமான மு.சிவலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆர்.எம்.ஜெயசீலன் வழங்க, முன்னாள் ஶ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதியும் விரிவுரையாளரும் கல்வித்துறை வளவாளருமான வ.செல்வராஜா கருத்துரை வழங்கவுள்ளார்.
நூல் அறிமுகத்தை வாசிப்புத்துறை வளவாளர் நா. கிருஷ்ணகுமார் வழங்க சுயாதீன ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவுள்ளார். நூலாசிரியரின் ஏற்புரையுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அரசியல் சமூக செயற்பாட்டாளர்களான செந்தூரன் வரவேற்புரையையும் வினோஜ் நன்றியுரையையும் வழங்குவர்.
நிகழ்ச்சி நிரல் இரண்டு மணி நேர எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் நூலின் பெறுமதி 450/= என ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். “நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகளைச் செய்யும் பாக்யா பதிப்பகம் "இது ஒரு திறந்த அழைப்பு” என அனைத்து வாசிப்பு ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment