ஜே.எப்.காமிலா பேகம்-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்துக்கு சென்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தனக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது எனவும், தனது வாக்கு மூலம் அவசியமாயின் கொழும்பிலுள்ள தனது வீட்டிற்கு வந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனஅவர் ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள், வாக்கு மூலத்தை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment