அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் "யுனிசெப்" நிறுவனத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற
கிழக்கு மாகாண சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் செயற்றிட்ட த்தின் ஊடக "சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாய குறைப்பை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு" அட்டாளைச்சேனை, உகண மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நேற்று (2020/08/24) அம்பாரை ரம்பீம வரவேற்பு மண்டபத்தில் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பங்குபற்றுனர்களுக்கு அனர்த்தத்திற்கு பின்னரான உளவளத்துணையின் அவசியம் பற்றி இறக்காம பிரதேச செயலக உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.பைஸால் விளக்கம் அளித்ததுடன் தொடர்ந்து அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் யூ.எல்.அசாருத்தீன் அனர்த்தத்தின் போது சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தையும் வழங்கியிருந்தார்.
இதில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், யுனிசெப் நிறுவனத்தின் செயற்திட்ட இணைப்பாளர் என்.யூ.செந்தூரன் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment