கிண்ணியாவில் ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணம்.


எப்.முபாரக்-

கிண்ணியாவில் ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்.

கிண்ணியா பூவரசன்தீவு எனப்படும் கிராமத்தில் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிண்ணியா பூவரசன்தீவு எனும் கிராமத்தில் வழமைபோன்று மாலை வேளையில் சகநண்பர்களுடன் நிஜாம் அஸ்னி (வயது-7) எனும் இச்சிறுவன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளபோது அங்கே அமைந்துள்ள பாவனையில் இல்லாத கிணற்றில் இச்சிறுவன் தவறுதலாக விழுந்ததில் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழமான இக்கிணறு மக்கள் பாவனையின்மையினால் அசுத்தமடைந்து நிலையில் இருந்துள்ள நிலையில் இக்கிணற்றின் பாதுகாப்புச் சுவர் மிகவும் தாழ்ந்த நிலையில் அமையப்பெற்றிருந்தது.

இம்மாணவன் கிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வித்தியாலயத்தில் தரம்-2 இல் கல்வி பயின்று வந்தவர். இவரின் தாய் ஒரு ஆசிரியை என்பதும் தந்தை கடைவியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு இரண்டு மகன்மார்கள் ஒருவர் தரம் 9 கல்வி பயின்று வருகின்றார்.

மரணமான இம்மாணவனின் உடல் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :