வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்ம் மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத்தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். ஆகக்கூடுதலான 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநி தித்துவப்படுத்துகின்றனர்.
22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் வாக்களிப்பில் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுவார்கள் . மிகுதி 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்னர்.
அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் 7,452 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னைய தேர்தல்களில் போன்று இல்லாமல் இம்முறை மாலை 05.00 மணி வரை வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பில் வைரஸ் பரவலுக்கு வாய்ப்பில்லை வாக்காளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் நீலம் - கறுப்புப் பேனைகளை வாக்காளர்கள் கொண்டு செல்லவேண்டும்.
நாட் டின் அனைத்து தேர்தல் மாவ ட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் 3,652 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்ட ணி ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் பொரும்பாலான மாவட்ட ங்களில் போ ட்டியிடுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்ட ணி யாழ். மாவட்ட ம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்ட ங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப்பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்ட ங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்ய ப்படவுள்ளனர். கொழும்பு மாவட்ட த்தில் 19 பேர் கம்பஹா மாவட்ட த்தில் 18, களுத்துறை மாவட்ட த்தில் 10., கண்டி மாவ ட்டத்தில் 12, மாத்தளை மாவட்ட த்தில் 05, நுவரெலியா மாவட்ட த்தில் 08 , காலி மாவட்ட த்தில் 09 ,மாத்தறை மாவட்ட த்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07,யாழ். மாவட்ட த்தில் 07, வன் னி மாவட்ட த்தில் 06, மட்ட க்களப்பு மாவட்ட த்தில் 05, திகாமடுல்ல மாவட்ட த்தில் 07, திருகோணமலை மாவட்ட த்தில் 04, குருநாகல் மாவ ட்டத்தில் 15, புத்தளம் மாவட்ட த்தில் 08, அனுராதபுரம் மாவட்ட த்தில் 09,பொலன்னறுவை மாவட்ட த்தில் 05,,பதுளை மாவட்ட த்தில் 09, மொனராகலை மாவட்ட த்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாகாலை மாவட்ட த்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்ய ப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment