2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடாத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைபாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இந்த தீர்மானத்தினை அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment