ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டவருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அண்மையில் ஊடக சந்திப்பை நடத்தி இந்த சதித்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த தகவல் பிரதமர் மஹிந்தவின் காதுகளுக்கு எட்டியுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் அவர், லக்ஸ்மன் யாப்பா மாத்தறை மாவட்டத்தில் தோல்வியடைந்துவிடுவார் என்ற அச்சத்தினால் இப்படியான போலித்தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment