பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான ஆதன வரி மீள் மதிப்பீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் 29 ஆவது சபை அமர்வு செவ்வாய்க்கிழமை(25) காலை 10 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 ஜுலை மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2020 ஜுலை மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் உரை இடம்பெற்றன.தொடர்ந்து 2021 ஆம் வருட மாட்டிறைச்சிக்கடை, கோழி இறைச்சிக்கடை, ஆட்டிறைச்சிக்கடை, பொதுச்சந்தை திறந்தவெளி ,பொதுச்சந்தை கடையறைகள் ,போன்றவைகளை குத்தகைக்கு வழங்குதல் தொடர்பாக உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான ஆதனவரி மீள் மதிப்பீடு தொடர்பில் மக்களின் அடிப்படை நலன் சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதேசசபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தவிர உப தவிசாளர் வை . எல் . சுலைமாலெவ்வை உறுப்பினர்களான ஏ . எல் . றியாஸ் ஆதம் எம் . எல் . ஏ . மஜிட் ஆகியோர் தத்ததமது முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment