தேர்தல் பிரசாரத்தில் ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
மெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கமலா ஹாரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
“இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலிருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் போதித்துள்ளதார்” எனக் கூறினார்.
கமலா ஹாரிஸ் தன் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் ‘சித்தி’ என்று குறிப்பிட்டது, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமலா ஹாரிசின் இந்த பேச்சு டுவிட்டரில் வைரலானது. பலரும் அவரது பேச்சை டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்கர்கள் பலர், ‘சித்தி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :