தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விஷேட அறிவித்தல்!

ஜே.எப்.காமிலா பேகம்-


தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள போதிலும் தேர்தல் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தொடர்ந்தும் நடைமுறையில் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பிரசார பேரணிகள், வீடுகளுக்கு சென்று முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், வேட்பாளர்களின் விளம்பர பலகைகள் காட்சிப்படுத்தல் மற்றும் சுவரொட்டிகள் விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுவதோடு, சுதந்திரமானதும் நியாயமானதுமான பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைப்புவழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் வாக்கு சீட்டுகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் கடுமையான பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்குகளின் எண்ணிக்கை ஆரம்பிக்கும் வரை வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களுக்கு பாதுகாப்பானதாகவும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லாதிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள், கொரோனா வைரஸ் அச்சத்தை விடுத்து தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் முறையாக பயன்படுத்துமாறும் தேஷபிரிய கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வாக்காளர் யாவரும் கையோடு பேனாவை கொண்டுவந்து வாக்களிப்பில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :