பணத்துக்கும் அரிசிக்கும் வாக்குகளை வழங்குகின்ற மக்களிடையே மாற்றம் வரவேண்டும். -அமீர் அலி


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ணத்துக்கும் அரிசிக்கும் வாக்குகளை வழங்குகின்ற மக்களிரைடயே மாற்றம் வரவேண்டும் அப்போதுதான் எமது சமுகத்தில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

நேற்று (06.08.2020) தேர்தல் முடிவுகளின் பின்னர் அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,


அரிவசி பேக்கிற்கும் பணத்திற்கும் தங்களது வாக்குரிமையை விற்பதற்கு எமது சமுகம் பழகிக்கொள்வார்களாக இருந்தால் எதிர்காலத்தில் தேர்தல்களை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை இந்தச் சமூகம் எதிர்நோக்குவதுடன் அரசியல்ரீதியான எந்த உரிமைகளையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்திற்குமிடமில்லை.

தேர்தலில் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வியை நாம் ஒவ்வொருவரும் தாங்கிக் கொள்ள வேண்டும் அதற்கென்று மன தைரியம் எமக்கு வரவேண்டும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் என்பதற்காக எமது ஆதரவாளர்கள் கவலைப்படுவதற்கும் எமக்கு எதிராக செயற்பட்டவர்கள் எம்மை தோற்கடித்து விட்டோம் என்பதற்காக சந்தோசப்படும் நேரமும் அல்ல என்னை தோற்கடித்ததால் அவர்கள் சாதித்தது என்ன எதுவுமே இல்லை இது இறைவனின் நாட்டப்படி நடைபெற்றுள்ளது.

இத் தேர்தலில் நாம் தோற்று விட்டோம் என்று எனது ஆதரவாளர்கள் எவரும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் ஒவ்வொருவரும் தைரியமாக இருக்க வேண்டும் உங்களது தைரியம்தான் எனது பலமாக அமையும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை குறிப்பாக கல்குடாவை நான் அனாதையாக விட்டுச் செல்ல மாட்டேன் என்னால் எந்தளவுக்கு இந்த சமூகத்திற்கும் சகோதர இன மக்களுக்கும் சேவைகள் செய்ய முடியுமோ அந்தளவுக்கு நான் எனது சேவைகளைச் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :