வீதியால் சென்ற நபர் ஒருவரிடம் அழைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு தொலைபேசியை தாருங்கள் என்று கேட்டு பெற்ற நபர் அதனைச் திருடிச் சென்ற சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீதியில் அவருடைய நண்பரிடம் பேசிக் கொண்டு நின்ற போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் அழைப்பு ஒன்றினை எடுப்பதற்கு தொலைபேசியை கேட்டுள்ளார்.
உதவி எனும் நோக்கில் அந்நபர் தொலைபேசியை கொடுக்க மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அதை எடுத்து தப்பிச் சென்றுள்ளார்.
தொலைபேசியை பறிகொடுத்த நபர், நூதனத் திருடனை அடையாளம் காண வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment