அப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $2 Trillion ( சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபா ) கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல்லை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற பெருமையை அப்பிள் பெற்றிருக்கிறது.
கொரோனாவால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், சில நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து உயர்வை நோக்கி நகர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஐபோன், ஐபேட், மேக்புக் உள்ளிட்ட தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகவுள்ள அப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $2 Trillion எனும் மதிப்பை எட்டியுள்ளது. பல்வேறு செயலிகள் மூலம் அப்பிள் நிறுவனம் வழங்கும் சேவைகள் மற்றும் 5G தொழில்நுட்பத்துடன் வரவிருக்கும் ஐபோன்-12 கைபேசி போன்றவை முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் அப்பிள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
முன்னதாக 2018ம் ஆண்டு அப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $1 Trillion என கணக்கிடப்பட்டது. நேற்று அப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை $468.65 ( சுமார் 85,700 ரூபா ) இருந்தது. அந்த வகையில் அப்பிள் நிறுவன சந்தை மதிப்பு $2 Trillion என கணக்கிடப்பட்டது.
அப்பிள் நிறுவனம் துவங்கி 42 வருடங்கள் கழித்து $1 Trillion சந்தை மதிப்பை எட்டியது. பின் இரண்டே வருடங்களில் இதன் மதிப்பு $2 Trillion அதிகரித்திருக்கிறது.
சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் நிறுவனம் கடந்த வருடம் டிசம்பரில் $2 Trillion அளவு சந்தை மதிப்பை தொட்டது. எனினும், தற்சமயம் இதன் சந்தை மதிப்பு $1.8 Trillion ( சுமார் 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபா ) ஆகவே உள்ளது. அந்த வகையில் அமெரிக்க சந்தையில் $2 Trillion எட்டும் முதல் நிறுவனமாக அப்பிள் இருக்கிறது.
அப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் அமேசன் மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் $1.6 Trillion ( சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபா ) சந்தை மதிப்பை கொண்டுள்ளன. கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபேட் சுமார் $1 ( சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபா ) Trillion சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
0 comments :
Post a Comment