விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிக்கு செல்லாத ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை.


காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை வலய ஆங்கிலபாட ஆசிரியர்களுள் இதுவரை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்குச் செல்லாத புதிய ஆங்கிலபாட ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறை நேற்று நடாத்தப்பட்டது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை நடாத்திய இந்த பட்டறைக்கு வளவாளர்களான வலய ஆங்கிலபாட சிரேஸ்ட ஆசிரியர்களான ஏ.ஜே.தினேஸ் செல்வி எஸ்.பிரதீபா ஆகியோர் செயற்பட்டனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் கிடைத்த அறிவு அனுபவங்கள் என்பனவற்றை ஏனைய புதிய ஆசிரியர்களுக்கு பகிர்தலே அப்பட்டறையின் நோக்கமாகும்.
வலய ஆங்கிலபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் அ.அப்துல்நசீர் தலைமையில் நடைபெற்ற இப்பட்டறை நிறைவில் வலயக்கல்விப்பணிபபாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு வலயமட்ட ஆங்கிலதினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இப்பட்டறை சம்மாந்துறை ஆசிரியர் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :