அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்திடம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (23) அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
சமூக சேவைகளின் முன்னோடியாகத் திகழ்கின்ற அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக் கழகம் மற்றும் அல் - நஜா சமூக சேவை அமைப்பு ஆகியன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து நடாத்திய இந்த மாபெரும் இரத்ததான முகாமில் விளையாட்டுக் கழக வீரர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பிர்கள், சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பிர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment