செயலாளர் கடத்தப்பட்டதை தொடர்ந்து ரத்தன தேரர் தலைமறைவு?


J.f.காமிலா பேகம்-
ங்கள் மக்கள் சக்தி கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ரத்தன தேரர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கட்சியின் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டமை குறித்து ரத்தன தேரருக்கு எதிராக முறைப்பாடு உள்ளது.
இதுகுறித்த விசாரணைக்கு ரத்தன தேரரை பொலிஸார் அவரது விகாரையில் சந்திக்க நேற்று சென்ற போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை..
அதனை அடுத்து தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்ட பொலிஸார், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு இன்று வருவதாக தேரர் கூறியிருக்கிறார்.

எனினும் விசாரணைக்கு அவர் இன்று ஆஜராகவில்லை.
இந்நிலையில் எங்கள் மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசன நெருக்கடி தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :