களிமண் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது - மங்கள சமரவீர


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

நாட்டை அபிவிருத்தி செய்வதை விட தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அந்த பலத்தை மாத்திரம் தேடிச் சென்றதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச வருமானம் மூன்றில் இரண்டு வீதம் குறைந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித பொருளாதார பார்வைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு இறுதி 4 மாதங்களுக்கான புதிய அரசாங்கத்தின் செலவுகளுக்காக தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் அரசாங்க செலவுகளுக்காக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த செலவை ஈடு செய்ய அரசாங்கத்திடம் போதுமான நிதியில்லை. இதன் காரணமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடியை நன்றாக வெளிப்படுத்துகிறது.

பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களுக்கு பதிலாக களிமண் பாத்திரங்களில் தண்ணீரை பருகுமாறும், வாரம் ஒரு முறை அரச ஊழியர்கள் பத்திக் ஆடை அணிய வேண்டும் என கோருவதன் மூலமும் முழு பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 1.6 என்ற வீதத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :