நிந்தவூரைச் சேர்ந்த அப்துல் கபூர் சத்தியப் பிரமாணம் செய்த மொழி பெயர்ப்பாளராக நியமனம்


நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில ஆசிரியர் ஏ.பி.அப்துல் கபூர் சத்தியப் பிரமாணம் செய்த மொழி பெயர்ப்பாளராக (Sworn Translator) அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றின் நீதிபதி கௌரவ இஸ்மாயில் பயாஸ் றஸ்ஸாக் (Ismail Pious Razzaq) அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சமாதான நீதவானாகிய இவர் தனது ஆரம்பக் கல்வியினை கமு/கமு/ இமாம் றூமி வித்தியாலயத்திலும் தனது இரண்டாம் மற்றும் உயர்தர கல்வியினை கமு/கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் கற்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக தனது தொழில் வான்மையினை விருத்தி செய்ததோடு மட்டுமல்லாமல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் தனது பட்டக் கல்வியினை முடித்த இவர் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவினை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் நிறைவு செய்துள்ளதோடு இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டமானிக் கற்கையின் (LLB) மூன்றாம் வருட மாணவரும் ஆவார்.

கல்வித்துறையில் தனது தொழிலை ஓர் ஆங்கில ஆசிரியராக ஆரம்பித்த இவர் ஊடகத்துறையிலும் கால்பதித்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் தனது ஆங்கில அறிவால் இலங்கையின் பிரதான ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளுக்கு நடப்பு விவகாரங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்கின்ற ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். இவர் அரசியல் சமுக பொருளாதார விடயங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றும் மனிதநேயம் மிக்க ஒருவருமாவார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :