முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!


எஸ்.அஷ்ரப்கான்-

ம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :