கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் கடைநிலை ஊழியர்களின் மேற்பார்வையின் கண்காணிக்கப்பட்டு வருகிறது :



 மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ. எம். சிபான் சீற்றம்.


நூருள் ஹுதா உமர்-
ல்முனை மாநகர சபையின் நிர்வாக கட்டமைப்பில் பல குறைபாடுகள் காணப்படுவதாக உணரமுடிகின்றது. கௌரவ மேயர் அவர்களோடு நிர்வாக உறுப்பினர்கள் ஒத்திசைந்து செல்லாமை, மாநகரசபையின் உயிரோட்டத்திற்கு ஒட்சிசன் இன்றி தவிப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதனை கண்ணூடாக காணக்கூடியதாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த நிலை மாற்றம் பெறவேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ. எம். சிபான் தெரிவித்தார்.
இன்று (26) மாலை சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி அபூபக்கர் ரக்கிப் தலைமையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் பேசும் போது,
நமது மாநகர சபையின் திட்டமிடல் குழு கலைக்கப்பட்டு ஆங்காங்கே சிதற விடப்பட்டு கிடைப்பதால் அது எமது மாநகர சபையின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு குந்தகமாக அமையும் என கூறிவைக்க விரும்புகின்றேன்.
அத்தோடு கடைநிலை ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் பட்டதாரிகள், நிர்வாக அதிகாரிகள், கண்காணிக்கப்பட்டு வருகின்றமையானது நமது மாநகர சபையின் செயற்பாட்டில் வீரியத்தை குறைத்து தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களின் மூலம் சிறந்த வெளியீடுகளை பெறுவதற்கு தடையாக இருக்கும் நிலை கண்டு வருந்துகிறேன்.
விரயத்தையும் ஊழலையும் குறைக்கும் முகமாக தங்களால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழு உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையால் செயலிழந்து காணப்படுவதானது வேதனை அழிக்கின்றது.
சுகாதார குழுவின் மேற்பார்வைக்கு MBBS வைத்தியர் ஒருவர் கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. ஆனால் அவருக்கு உள்ளக கள விஜயத்திற்கான வாகன வசதி கூட இன்னும் செய்து வழங்கப்படாமை குறைபாடாகும்.
சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ உத்தியோகத்தர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் மாநகரசபையின் மாதாந்த வருமானம் மூலமே சம்பளம் வழங்கும் நடவடிக்கைகள் எமது மாநகரசபையின் வளர்ச்சியை இன்னும் இன்னும் பின் நோக்கி நகர்த்தும் செயற்பாடுகளே. இருந்திட்ட போதிலும் அவர்களுடைய சம்பளங்கள் உரிய நேரத்துக்கு வழங்க ஆவண செய்யப்படுதல் வேண்டும்.
மேலும் இந்த மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள் பார்க்கிங் வசதிகள் நிவர்த்திசெய்து வெகுவிரைவாக வழங்கப்படல் வேண்டும்.
கௌரவ மேயர் அவர்களே 1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட இந்த மாநகர சபை கட்டடத்தில் திருத்தி புதிதாக கட்டுவதற்கான முயற்சிகளை ஏன் உங்களால் கூட இன்னும் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வியினை நான் எழுப்புகின்றேன்? சிறுபான்மை மக்களின் இதயங்களில் ஒன்றாக இருக்கின்ற இந்த கல்முனை மாநகர சபை கட்டிடம் கம்பீரமாக உயர்ந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் அவா.
பழைய கட்டடத்துக்கு ஓடு மாற்றி மாற்றி இருக்கும் மேயராக நீங்கள் அல்லாமல் வெளிநாட்டு உதவிகளை அல்லது பொறுப்பான அமைச்சர்களை கொண்டு இந்த நீத்து கட்டடத்தை புதிதாக கட்ட உங்கள் பதவி காலத்தில் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்த உயரிய சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன் . உங்கள் நடவடிக்கைகளுக்காக எங்களால் ஆன அத்தனை பங்களிப்புகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்!

நமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை கிராமத்தில் பிற்பகல் வேளையில் கடற்கரையை நோக்கி வெளியூர்களில் இருந்தும் அதிகமான மக்கள் தொகை கூடுவதனை நாம் அறிவோம் .தரித்திருக்கும் அவர்கள் தங்கள் அவசர நேரங்களில் மலசலம் கழிப்பதற்காக கடும் இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக அறியமுடிகின்றது . ஆகவே கடற்கரையை அண்டிய பகுதிகளில் பொருத்தமான இடம் கண்டறியப்பட்டு கல்முனை மாநகர சபையினால் பொது மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்றார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :