எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு அரசங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையினரின் அனுமதியை பெற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முன்னிரிமை அளித்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தருவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதன் காரணமாக நாட்டில் நிர்கதிக்குள்ளாகி இருந்த அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் அந்தந்த நாடுகளுக்கு மீண்டும் அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment