கல்முனை பிரதேச செயலகதில் (வடக்கு) வர்த்தக சந்தை இன்று(24) முற்பகல் ஆரம்பமானது
இவ்வர்த்தக சந்தை கண்காட்சியை பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ் ஆரம்பித்து வைத்தார்.
இரு நாட்களாக இவ்வர்த்தக சந்தை இடம்பெறுவதுடன் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வர்த்தக சந்தையினை கல்முனை பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வர்த்தக சந்தையில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்பத்தியாளர்களும் பார்வையாளர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment