எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து சபாநாயகர் கருஜயசூரிய நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் தாம் தொடர்ந்தும் கட்சியில் நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment