மைத்திரி இராஜினாமா?


J.f.காமிலா பேகம்-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர கட்சியின் நிறைவாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதனிடையே கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவர அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய செயற்குழுவில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ளனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எம்.பி சாந்த பண்டார விலகியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அவர் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :