இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 05 மணிக்கு நிறைவடைந்தது.
இம்முறை பொதுத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற வாக்குப்பதிவில் நாடளாவிய ரீதியில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று பிற்பகல் 2.30 க்கும் 3.30 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட ரீதியில் வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளின பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment