அரசாங்கம் நாட்டுக்காகவா அல்லது குடும்பத்திற்காகவா – மனுஷ நாணயக்கார கேள்வி


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

னாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு கீழ் வருகின்ற 434 அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

பாரளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்:-

இவர்களின் சேவைகள் நாட்டுக்காகவா அல்லது குடும்பத்திற்காகவா என்று பார்க்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சர்களாக சமல் ராஜபக்‌ஷ , நாமல் ராஜபக்‌ஷ என்ற இருவர், அத்துடன் ராஜாங்க அமைச்சராக ஷசிந்திர ராஜபக்ஷ மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நிபுண என ஒரு வலையமைப்பு உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 3 அமைச்சுகள் , கோட்டாபய ராஜபக்‌ஷவின் கீழ் 23 நிறுவனங்கள், சமல் ராஜபக்‌ஷவின் கீழ் 17 நிறுவனங்கள், பிரதமர் வகிக்கும் அமைச்சு பதவிகளின் 76 நிறுவனங்களும், நாமல் ராஜபக‌்ஷவின் கீழ் 7 நிறுவனங்களும், ஷசிந்திர ராஜபக்‌ஷவின் கீழ் 6 நிறுவனங்களும் உள்ளன.

அதேபோன்று அமைச்சு பெயர் குறிப்பிடப்படாத முக்கிய 7 நிறுவனங்கள் பஷில் ராஜபக‌்ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இருக்கின்றன.

இதன்படி 126 நிறுவனங்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. 434 நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் அதாவது 26% நிறுவனங்கள் ராஜபக‌்ஷ சகோதரர்கள் குடும்பத்தின் கீழே இயங்குகின்றன என தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :