பதினேழு வயது பெண்ணை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு விளக்கமறியல்

எப்.முபாரக்-


திருகோணமலை சம்பூரில் பதினேழு வயதுடைய பெண்ணொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(24) உத்தரவிட்டார்.

சீதனவெளி,சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த பதினேழு வயதுடைய பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையிலே பெற்றோர்களுக்கு தெரியாமல் சம்பூர் சூரநகர் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஞாயிற்றுக்கிழமை(23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சதேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பதினேழு வயதுடைய பெண் மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :