தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா


ஹஸ்பர் ஏ ஹலீம்-

தி
ருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபையின் கீழ் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27) இடம் பெற்றது.

" வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்"எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த பரிசளிப்பு விழாவில் முள்ளிப்பொத்தானை கோட்டக்கல்வி வலய மாணவ மாணவிகள் சுமார் 100 பேர்கள் இதன் போது சான்றிதழ்கள்,கேடயங்களை பெற்றுக் கொண்டார்கள்.
சிறுகதை, கட்டுரை, வினா விடை போட்டி, விவாதம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.

இவ்வாறாக வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களே வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவ மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையினை அலங்கரித்தன. 

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ஜீ.எஸ்.எல்.தென்னக்கோன், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி, உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார, பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர்கள், மாணவ மாணவிகள் ,பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :