நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் தீவிரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பிரெண்டன் டெரண்டுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் தீவிரவாத தாக்குதல் தொடர்பான தொடர் விசாரணைகள் கடந்த 24 ஆம் திகதி முதல் 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரெண்டன் டெரண்ட் (Brenton Tarrant) என்பவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 பேர் உயிரிழந்திருந்தனர்.
இரண்டு முக்கிய பள்ளிவாசல்களை இலக்குவைத்து இந்த தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இதனை அடுத்து, பிரெண்டன் டெரண்ட் (Brenton Tarrant) கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் தீவிரவாத செயற்பாடு குறித்த குற்றச்சாட்டு ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரெண்டன் டெரண்ட் (Brenton Tarrant) மீதான வழக்கு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூஸிலாந்தின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை இது என சர்வதேச ஊடங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment