கொரோனாவை வென்ற 100 வயது இந்திய மூதாட்டி



எம்.ஐ.இர்ஷாத்-

சாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்த செய்தி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, வயதான முதியவர்கள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அதிகளவில் இலக்காகின்றனர்.

இருப்பினும் பல இடங்களில் 100 வயதை கடந்தவர்கள் கூட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் அசாமை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம் பெற்றுள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மகேந்திர மோகன் சவுத்ரி மருத்துவமனையில், முதியோர் இல்லத்தில் வசித்து வரும் மாயி ஹாண்டிக்யூ என்ற 100 வயது மூதாட்டி, 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருந்த அவர் தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் எனக்கு, பெரும்பாலான நேரம் அசைவ உணவுகளையே வழங்கினார்கள். அவை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த மூதாட்டி தெரிவித்திருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :