20வது திருத்தம் ஓர் பார்வை வை எல் எஸ் ஹமீட் -பாகம்-5


நீதிச்சேவை ஆணைக்குழு
———————————-
1978ம் ஆண்டைய original யாப்பு- சரத்து 112

இதன்கீழ் ஒரு நீதிச்சேவை ஆணைக்குழு பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்களையும் கொண்டிருக்கும். 112(1)

இதில் ஜனாதியினால் நியமிக்கப்படும் எந்தவொரு அங்கத்தவரையும் காரணம் குறிப்பிட்டு ஜனாதிபதியினால் நீக்கமுடியும். 112(5)

17வது திருத்தம் -
———————
நியமனம்

“ஜனாதிபதி நியமிப்பார்” என்பது ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்தில் ஜனாதிபதி நியமிப்பார்” என்று திருத்தப்பட்டது.-111D(1)

நீக்கம்
———
அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசில் காரணம் குறுப்பிட்டு ஜனாதிபதி நீக்கலாம்; என்று திருத்தப்பட்டது. இதன் பிரகாரம் சுயமாக ஜனாதிபதியினால் நீக்கமுடியாது.- 111E(6)

18வது திருத்தம்
———————
நியமனம்
————-
அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம்; என்பது நீக்கப்பட்டு “ ஜனாதிபதி நியமிப்பார்” ( 1978ம் ஆண்டைய யாப்பின் நிலைப்பாடு) என்று திருத்தப்பட்டது. ( பாராளுமன்றப் பேரவையின் அவதானம் கோரப்படும்)

நீக்கம்
———
இதுவும் “ அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின்பேரில்” என்பது நீக்கப்பட்டு 1978ம் ஆண்டு யாப்பின் நிலைப்பாடு கொண்டுவரப்பட்டது.

19வது திருத்தம்
——————-
நியமனம்
————-
இது 17இல் இருந்தும் சற்று வேறுபட்டது. அதாவது, “ அரசியல் அமைப்புப் பேரவையின் அங்கீகாரத்தில்” என்பது மீண்டும் கொண்டுவரப்பட்டது. மாற்றம் என்னவென்றால், பிரதம நீதியரசருடன் “ இன்னும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள்” என்பது ‘இன்னும் இரு “ சிரேஷ்ட” உயர்நீதிமன்ற நீதியரசர்கள்” என்றும்- 111D(1)

பிரதம நீதியரசர் உட்பட அம்மூவரில் ஒருவரேனும் Court of First Instance ( முதனிலை நீதிமன்றத்தில்) சேவையாற்றிய அனுபவமுடையவராக இல்லாதபோது ஆணைக்குழு பிரதம நீதியரசர், அதி சிரேஷ்ட நீதியரசர் மற்றும் முதனிலை நீதிமன்ற அனுபவத்தைக்கொண்ட அடுத்த அதி சிரேஷ்ட நீதியரசரைக் கொண்டதாக இருக்கவேண்டும். என்றும் திருத்தப்பட்டது.

நீக்கம்
———-
17இல் “ அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசில் என்பது “ 19இல் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்தில்” என்று மாற்றப்பட்டது.

20 வது திருத்தம்
————————
நியமனம்
————

இதில் மீண்டும் 18ஐப் போல் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவர்”, ( இங்கும் பாராளுமன்றப் பேரவையின் அவதானம் கோரப்படும்); “அதி சிரேஷ்ட” என்ற பதம் மற்றும் “முதனிலை நீதிமன்றத்தின் அனுபவம்” போன்றவையும் நீக்கப்பட்டுவிட்டன.

நீக்கம்
———-
18இல் இருந்ததைப்போல் “ காரணம் குறித்து ஜனாதிபதி நீக்கலாம்” என்று திருத்தப்பட்டிருக்கின்றது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் சங்கம் 20 வது திருத்தம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள பல விடயங்களுள் மேற்குறித்த இரு விடயங்களும் அடங்குகின்றன; என்பன குறிப்பிடத்தக்கது.

ஏனைய ஆணைக்குழுக்கள்:
————————————-
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு ( Audit Service Commission)

இவ்வாணைக்குழு 20 வது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டேவிட்டது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு
—————————————-
இதனது நியமனம், நீக்கம் அனைத்தும் ஆரம்பத்தில் கூறப்பட்டபடி இருக்கும். அதாவது நியமனம்- ஜனாதிபதி, பேரவை- அவதானம் மட்டும். நீக்கம்- ஜனாதிபதி, காரணம்கூட கூறத்தேவையல்லை. ஒரு அங்கத்தவர் DIG தரத்திலான ஓய்வுபெற்றவராக இருக்கவேண்டும்; என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொலிஸ் ஆணைக்குழுவிடமிருந்து நீக்கம்.

20 வது திருத்தத்தின்படி மேற்படி ஆணைக்குழுவின் அதிகாரம் பொலிசாருக்கெதிராக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதும் சட்டரீதியாக அவற்றை விசாரித்துத் தீர்வுகளை வழங்குவதும்தான்.

சில பதவிநிலை நியமனங்கள்
—————————————-
நியமனம்
————-
ஏற்கனவே 17,18,19,20 இன் நடைமுறையை ஏற்கனவே பார்த்தோம்.

நியமனங்களெல்லாம் ஒரேவிதம். அதாவது 17, 19 இல் அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி நியமிப்பார். 18, 20 இல் ஜனாதிபதியே நியமிப்பார். பாராளுமன்றப் பேரவையின் அவதானம் மாத்திரமே கோரப்படும்.

நீக்கம்
———
இதுவும் ஏற்கனவே பார்த்தோம். அதாவது 17, 19 இல் அரசியலமைப்பில் அல்லது ஏதாவது ஒரு சட்டத்தில் குறிப்பிட்டிருந்தால் அதன்படியும் அவ்வாறு குறிப்பிடாதபோது நீக்கவே முடியாது. அல்லது பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துதான் நீக்கவேண்டும்.

18 இலும் 20 இலும் அரசியலமைப்பில் அல்லது ஏதாவதொரு சட்டத்தில் கூறப்பட்டிருந்தால் அவற்றின்படியும் அவ்வாறு எதுவும் கூறப்படாதபோது ஜனாதிபதி நீக்கலாம்; என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இங்கு நாங்கள் பார்க்கப்போவது முக்கியமான சில குறித்த பதவிநிலைக்குரியவர்களை நீக்குவது தொடர்பாக அரசியல் அமைப்பில் அல்லது சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா? அல்லது ஜனாதிபதியே நீக்கலாமா? என்பதுதான்.

உயர்நீதிமன்ற, மேல்நீதிமன்ற நீதியரசரசர்கள்- சரத்து 107
————————————————————
இது தொடர்பாக பாகம்-4 இல் பார்த்தோம்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர்
——————————————————-
இவர்களை நீக்குவது தொடர்பாக அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை. அது Removal of Officers Act No 5 of 2002 என்ற சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்ட, உள, உடல் ரீதியாக முடியாமை போன்ற சில காரணங்களுக்காக ஜனாதிபதி நேரடியாக நீக்கமுடியும்.

ஏனைய குற்றச் சாட்டுக்களைப் பொறுத்தவரை நீதியரசர்களை நீக்குகின்ற அதே நடைமுறை ( சரத்து-107) இங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவைப் பொறுத்தவரை சட்டமாஅதிபருக்கெதிரான விசாரணை என்றால் பிரதம நீதியரசர் தலைமையில் மூவர்கொண்ட குழுவும் பொலிஸ்மா அதிபருக்கெதிரான விசாரணையென்றால் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையிலான மூவர்கொண்ட குழுவும் நியமிக்கப்பட வேண்டும்.

இது சாதாரண சட்டம் என்பதால் 20 வது திருத்தம் நிறைவேறியதன்பின் இதிலும் திருத்தம் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கணக்காய்வாளர் நாயகம், ஓம்புட்ஸ்மன்
—————————————————-
இவர்கள் இருவரையும் பொறுத்தவரை முன்னர் கூறியதுபோல் நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும். ( பாராளுமன்றப் பேரவையின் அவதானம் கோரப்படும்) சரத்துக்கள் 153, 156

நீக்கம் தற்போதைய 19 கீழ் இருக்கும் அதே நடைமுறை 20 இல் மாற்றப்படவில்லை. அதாவது பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவருவதன்மூலம் ஜனாதிபதியினால் நீக்கப்படுதல். 153(3) மற்றும் 156(4); ஆனால் உடல் நலக்குறைவின் அடிப்படையில் பாராளுமன்றப்பிரேரணை இல்லாமல் ஜனாதிபதி நீக்கலாம்.

பாராளுமன்றப் பிரேரணை
———————————-
இங்கு “பாராளுமன்றப் பிரேரணை” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர 107 இல் குறிப்பிடப்பட்ட விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

அதன்பொருள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவும் தேவையில்லை; நிரூபிக்கப்படவும் தேவையில்லை. அறுதிப்பெரும்பான்மை தேவையில்லை. ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து சாதாரண பெரும்பான்மையால் நீக்கிவிடலாம்.

இதற்கும் 20 இற்கும் சம்பந்தமில்லை. இதுதான் தற்போதைய நடைமுறை. 20 இல் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :