2000பேர் பங்கேற்கும் பிரமாண்டமான மண்டபம் இன்று காரைதீவில்திறப்பு.



அம்பாறை மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன் தவிசாளர் ஜெயசிறில் திறந்துவைப்பு.
காரைதீவு சகா-

சுமார் 2000 பேரைக்கொள்ளும் பிரமாண்டமான திருமண மண்டமொன்று 18)வெள்ளிக்கிழமை காலை காரைதீவில் திறந்துவைக்கப்பட்டது.
'இரத்தினபதி திருமணமண்டபம்' எனும் பெயரைக்கொண்ட இப்பாரியமண்டபத்தை அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தனர்.
கண்ணகை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி மண்டபத் திறப்புவிழாவை ஆரம்பித்துவைத்தார்.
காரைதீவைச்சேர்ந்த சிவஸ்ரீ. தியாகராசாக் குருக்களின் ஏற்பாட்டில் கடற்கரையை அண்டிய மனோரம்மியமான இடத்தில் வாகனங்கள் தரித்துநிற்கும் இடங்களுள்ள வசதியான இடத்தில் இம்மண்டபம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலேயே இத்தகையதொரு விசாலமானதொரு ஒருதள மண்டபம் இதுவே எனக்கூறப்படுகிறது.வருங்காலத்தில் இம்மண்டபம் வாடகைக்குவிடப்படவிருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :