சேவிங் ஹியூமெனிட்டி அமைப்பானது சர்வதேச நிலைபேர் அபிவிருத்தி இலக்குகளை அடிப்படையாக்கொண்டு "நல் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஏற்படுத்துதல்" (SDG-3 Establish Good Health and Well-Being) என்னும் இலக்கு மூன்றுக்கு அமைவாக Global One குளோபல் வன் நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் பல்லினத்தை பிரதிபலிக்கும் வகையில் தனது சேவையை விஸ்தீரணம் செய்து வருகின்றது.
Shf Sri-Lanka நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் Maharoff Mohamed Ansari அவர்களின் ஒருங்கிணைப்பில் நேற்று (09) வெள்ளைமணல் பிரதேசத்தில் 30 கர்ப்பிணி பெண்களுக்கான Dignity Kits Distribution நிகழ்வு அப்பிரதேச Health Care Center இல் பிரதேச தாதியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உப பிரதேச சபை அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.எம்.பி.ஜெயமாலி மற்றும் MWG.Chamila மற்றும் அதிபர் MY.Hathiyathullah, ஆயுர்வேத வைத்திய அதிகாரி MHF.Rismiya என்பவர்களோடு விரிவுரையாளராக வைத்தியர் MMF.Ishara ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment