விசேட அதிரடிப்படையின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை


பாறுக் ஷிஹான்-


பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)ஆரம்பிக்கபட்டு 36 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நாட்டுக்கும் படை வீரர்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை மாலை இடம்பெற்றது .

இந்நிகழ்வானது மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.எம்.டாக்டர் மெளலானா தலைமையில் இடம்பெற்றதுடன் மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாதிகாரி எம். எச். அமில மதுரங்க உட்பட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் விசேட அதிரடிப்படையினரால் பள்ளிவாசலில் கடந்த கால யுத்தத்தின போது உயிர் நீத்த விசேட அதிரடிப்படை படை வீரர்களுக்காகவும் விசேட பிராத்தனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது மருதமுனை ஜமியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களில் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சர்மில் ஜஹான் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்கள்,விசேட அதிரடி படையினர் பொது மக்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :