சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியே 77 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 இலட்சத்து 39 ஆயிரத்து தொள்ளாயிரத்து 50 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 77 இலட்சத்து 21 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இவர்களில் அதிக அளவிலானோர் இந்தியாவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், 89 ஆயிரத்து 852 பேரும், பிரேஸிலில் 17 ஆயிரத்து 330 பேரும், அமெரிக்காவில் 27 ஆயிரத்து 579 பேரும், நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 287 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 இலட்சத்து 843 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 கோடியே 98 இலட்சத்து 8 ஆயிரத்து 551 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment